உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு பூஜை

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சிறப்பு பூஜை

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று காலை 11:00 மணிக்கு யோகபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் துவங்கின. ரமேஷ்குருக்கள்,கணேஷ் குருக்கள்,பிரதோஷ குருக்கள் பூஜைகளை நடத்தினர். பின்னர் மூலவருக்கு பல வித திரவியங்களால் அபிேஷகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !