காலபைரவருக்கு அஷ்ட பைரவ யாகம்; வடுக பூஜை.. பக்தர்கள் பரவசம்
ADDED :1007 days ago
கோவை; கோவை ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் ஜென்மாஷ்டமி தினத்தை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்ட பைரவ யாகம் நடந்தது. தொடர்ந்து, வடுக பூஜை, பைரவ சகஸ்ரநாமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் சந்தன காப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.