உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம்

திருமலையில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம்

திருப்பதி; திருமலை நாதநீராஜன மண்டபத்தில் அயோத்தியா காண்ட பாராயணம் நடைபெற்றது.திருமலையில் ராமாயண காண்டங்கள் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. சுந்தர காண்டத்தைத் தொடா்ந்து பாலகாண்டம், ஆரண்ய காண்டம் முடிவு பெற்று தற்போது அயோத்தியா காண்டம் தொடங்கியுள்ளது. இதன் முதல் அகண்ட பாராயணம் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை திருமலை நாதநீராஜனம் நடைபெற்றது. இதில் 14 முதல் 17 வரை 186 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. யோகவாசிஷ்டம் - தன்வந்திரி மஹாமந்திரம் 25 ஸ்லோகங்கள் ஓதப்பட்டது. வேத பண்டிதர்கள் அகண்டம் ஓத, ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பின்தொடர்ந்து ஸ்லோகம் சொல்லினர். தர்மகிரி வேத விக்னன்பீடத்திலிருந்து புகழ்பெற்ற அறிஞர்கள் ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஸ்ரீ அனந்த வேணுகோபால் மற்றும் ஸ்ரீ மாருதி ஸ்லோகம் பாராயணம் செய்தனர். அகண்ட பாராயணத்தில் தர்மகிரி வேத பள்ளி ஆசிரியர்கள், எஸ்.வி.வேத பல்கலைகழக ஆசிரியர்கள், எஸ்.வி.உன்னத வேத நிறுவன வேத ஓதுபவர்கள், ராஷ்ட்ரிய சமஸ்கிருத பல்கலைகழக அறிஞர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !