உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்துக்காளியம்மன் குண்டம் விழா; 28ல் துவக்கம்

கொண்டத்துக்காளியம்மன் குண்டம் விழா; 28ல் துவக்கம்

கோபி; கோபி அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா வரும், 28ல், பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் ஜனவரியில் குண்டம் தேர்த்திருவிழா நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன்படி நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா வரும், 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 2024 ஜன.,8ல், சந்தனக்காப்பு அலங்காரம், 10ல், மாவிளக்கு பூஜை, 11ல், குண்டம் இறங்குதல், 12ல் திருத்தேரோட்டம், 13ல், மலர் பல்லக்கு உற்சவம், 20ல், மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !