மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
641 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
641 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
641 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து, மஹா தீப கொப்பரை நேற்று இறக்கப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீப திருவிழாவில், கடந்த, 26ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. காடா துணியால் ராட்சத திரி தயாரிக்கப்பட்டு, 6 அடி உயர கொப்பரையில் ஏற்றப்பட்ட மஹா தீபம், 40 கி.மீ., துாரம் வரை தெரிந்தது. கடந்த, 11 நாட்களாக எரிந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணியுடன் மஹா தீபம் எரியும் நிகழ்வு நிறைவடைந்தது. இதையடுத்து உச்சியிலிருந்து மஹா தீப கொப்பரை இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வந்து, சிறப்பு பூஜை செய்தனர். மஹா தீப கொப்பரையில் சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், 27ம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இதில், நெய் காணிக்கை செலுத்தியவர்களுக்கு இலவசமாக தீப மை தபாலில் அனுப்பி வைக்கப்படும். நெய் காணிக்கை செலுத்தாத பக்தர்கள், 10 ரூபாய் செலுத்தி, தீப மை பிரசாத பாக்கெட்டை பெறலாம்.
641 days ago
641 days ago
641 days ago