/
கோயில்கள் செய்திகள் / மார்கழி அமாவாசை: பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோருக்கு திதி கொடுத்து வழிபாடு
மார்கழி அமாவாசை: பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோருக்கு திதி கொடுத்து வழிபாடு
ADDED :8 hours ago
கோவை: மார்கழி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.இதில் தங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை வைத்து வேத பண்டிதர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்தனர். பின்னர் தின்பண்டங்களை காகங்களுக்கு படைத்து சூரியனை வழிபட்டனர். அதன் பின்னர் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்தனர்.மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி இறுதியாக பேரூர் பட்டீஸ்வரரை வணங்கி சென்றனர்.