ஏழுமலையானை எளிதாக தரிசித்த பக்தர்கள் பரவசம்; குறைந்தது பக்தர்கள் கூட்டம்
ADDED :779 days ago
திருப்பதி:திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். தற்போது, மிக்ஜம் புயல் காரணமாக தமிழகம், ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்று பகுதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருப்பதி வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் நிற்காமல் நேரடியாக தரிசனம் செய்தனர். இதனால் எளிதாக ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.