ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாலாலயம்
ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்வதற்கு பாலாலயம் நடந்தது.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான ஒட்டன்சத்திரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலை புனரமைப்பதற்காக திருப்பணிகள் செய்வதற்கு நேற்று பாலாலயம் நடந்தது. விநாயகர் வழிபாடு, முதற்கால வேள்வி, இரண்டாம் கால வேள்வியை தொடர்ந்து திருக்குடங்கள் ஞான திருவுலா, திருக்குடங்களில் இருக்கும் திருக்குட சக்தியை திருப்படங்களில் எழுந்தருள செய்தல், திருமறை, திருமுறை விண்ணப்பம் போரொளி வழிபாடு நடந்தது தொடர்ந்து திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு திருநீறு, திரு அமுது வழங்குதல் நடந்தது.
பழநி தண்டாயுத சுவாமி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், சத்யா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், கண்காணிப்பாளர் மகேஸ்வரி, ஆராதனை குழுவைச் சேர்ந்த கோவிந்தசாமி, கருப்புசாமி, முத்துகிருஷ்ணன், நடராஜ், தங்கமுத்து, செந்தில், விஜயலட்சுமி, மீனா, நாகலட்சுமி, செல்வகணேசன், , கமிஷன் கடை உரிமையாளர் சிவா, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.