திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கடலோர காவல்படை ஐ.ஜி. சுவாமி தரிசனம்
ADDED :665 days ago
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் நேற்று இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி. டோனி மிச்சல் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நேற்று இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி. டோனி மிச்சல் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை புரிந்த இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கடலோர காவல்படை ஐ.ஜி. டோனி மிச்சல் தர்ப்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டார். பின்னர் சனீஸ்வரபகவான், அம்பாள் ஆகியோருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். உடன் கடலோர காவல்படை அதிகாரி பலர் இருந்தனர்.