உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாள் கோயிலில் கோயிலில் ஏகாதசி திருவிழா தொடங்கியது

ரங்கநாத பெருமாள் கோயிலில் கோயிலில் ஏகாதசி திருவிழா தொடங்கியது

தேவகோட்டை; தேவகோட்டை ரங்க நாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவிழா பகல்பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை திருமஞ்சனம் பூஜைகளை தொடர்ந்து ரங்கநாத பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் உள் வீதி புறப்பாடு நடந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை நடந்தது. ஏகாதசி திருவிழாவின் முதல்நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பகல் பத்து உற்சவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !