கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர பூஜை
ADDED :665 days ago
கன்னிவாடி; கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், கார்த்திகை மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், திருவாசக முற்றோதல், உற்சவர் பிரகார வலம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.