வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :666 days ago
வடமதுரை; வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக ஏழுமலையான் கோயில் சென்று பின்னர் நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் குழுவினர் யாக சாலை பூஜைகளை நடத்தினர். அலங்கார ரதத்தில் அம்மன் ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாட்டினை கோயில் சேவார்த்திகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.