அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேருக்கு சன்னை மரங்கள் மற்றும் குடில் நன்கொடை
ADDED :673 days ago
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேருக்கு சன்னை மரங்கள் மற்றும் குடில் நன்கொடையாக வழங்கப்பட்டது.
அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனரால் பாடல் பெற்ற தலமும், தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என புகழ் பெற்றதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேசுவரர் கோவிலில் உள்ள பெரிய தேருக்கும் மற்றும் அம்மன் தேருக்கும் சன்னை மரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. சித்திரை தேர் திருவிழாவின்போது சன்னை போடுவதற்காக மரங்களும், குடில் முட்டிகளும், ராயம்பாளையம், புதுப்பாளையம் சன்னை மிராசுகள், நிர்வாகிகள் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்காக ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் இருந்து காட்டு வாகை மரத்திலான சன்னை மூன்றும், குடில் முட்டிகள் இருபதும் செய்யப்பட்டு கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.