உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கிருஷ்ணர் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

செஞ்சி கிருஷ்ணர் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

செஞ்சி; செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்து கலசாபிஷேகம் நடந்தது.

செஞ்சி சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு கிருஷ்ணர், ராதா ருக்மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. காலை 9 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமமும், 10 மணிக்கு சிலை பிரதிஷ்டையும், தொடர்ந்து கலசபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !