உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோவிலில் மார்கழி பூஜை; பக்தர்கள் தரிசனம்

நத்தம் மாரியம்மன் கோவிலில் மார்கழி பூஜை; பக்தர்கள் தரிசனம்

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைப்போலவே கோவில்பட்டி கைலாசநாதர்,பகவதி அம்மன், காளியம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன் கோவில்களில் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !