/
கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் கனமழை.. கோயிலில் சிக்கிய பக்தர்கள்; கயிறு கட்டி மீட்கும் பணி தீவிரம்
சதுரகிரியில் கனமழை.. கோயிலில் சிக்கிய பக்தர்கள்; கயிறு கட்டி மீட்கும் பணி தீவிரம்
ADDED :672 days ago
சதுரகிரி ; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து இன்று காலை கீழே இறங்கிய பக்தர்களை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர்
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி மறுத்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் நேரம் செல்லச் செல்ல லேசான சாரல் மழை பெய்தது. சாரல் மழையில் நனைந்து கொண்டே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பக்தர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் தவித்தனர். அவற்களை இன்று காலை வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர்.