உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா துவக்கம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா துவக்கம்

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பெருந்திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்தாண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாணுமாலயன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !