உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல் பத்து எட்டாம் நாள்; மஞ்சள் பட்டு உடுத்தி நம்பெருமாள் காட்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல் பத்து எட்டாம் நாள்; மஞ்சள் பட்டு உடுத்தி நம்பெருமாள் காட்சி

திருச்சி; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் எட்டாம் நாளில், நம்பெருமாள், திருநறையூர் பாசுரங்களுக்காக சௌரிக் கொண்டை அணிந்து, அதில் நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், கல் இழைத்த ஒட்டியாணத்தை தலைக்கட்டாக அணிந்து, மார்பில்  பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் தாயார் - பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, தங்கப்பூண் பவழ மாலை, காசு மாலை, 6 வட முத்து மாலை, சிகப்புக்கல் அபய ஹஸ்தம், கோலக் கிளி அணிந்து, பின் சேவையில் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி அணிந்து, மாம்பழ நிற மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு சேவை சாத்தித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !