உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சி; குச்சனூர் சனீஸ்வர பகவானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

சனிப்பெயர்ச்சி; குச்சனூர் சனீஸ்வர பகவானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் சனி பகவான் சுயம்புவாக தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, உப்பு, காக்கை பொம்மை வைத்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இன்று மாலை 5.20மணிக்கு மகரத்திலிருந்து, கும்பராசிக்கு சனீஸ்வரர் பெயர்ச்சியடைந்தார். சனிபெயர்ச்சியையொட்டி குச்சனூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !