மொரட்டாண்டியில் சனிப்பெயர்ச்சி விழா; 27 அடி உயர சனி பகவானுக்கு சிறப்பு பூஜை
ADDED :737 days ago
புதுச்சேரி ; மொரட்டாண்டி சனீஸ்வரர் பகவான் கோவிலில் 27 அடி உயர சனி பகவானுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள நவகிரக கோவிலில் விஸ்வரூப சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார். இங்கு, இன்று 20ம் தேதி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், தோஷ நிவர்த்திகள், பரிகாரங்கள் நடைபெற்றது. இன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனீஸ்வரர் பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு, கோவிலில் 27 அடி உயர சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், மகாதீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.