உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சி; யந்திர வடிவில் அருள்பாலித்த சனீஸ்வரன்.. பக்தர்கள் பரவசம்

சனிப்பெயர்ச்சி; யந்திர வடிவில் அருள்பாலித்த சனீஸ்வரன்.. பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை ; ஆரணி அடுத்த  ஏரிக்குப்பம் பகுதியில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவிலில், சனிப்பெயர்ச்சி முன்னிட்டு யந்திர வடிவில் சனீஸ்வரன் பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தரகளுக்கு  காட்சியளித்தார்.

சிறப்பு மிக்க கோவிலில் இன்று சனிப் பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து மாலை 5:20 மணிக்கு கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதனை முன்னிட்டு காலை முதல் பரிகார ஹோமம், தீபாராதனை நடைபெற்றன. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம், விருச்சகம், மகரம், மீனம் ராசிகளை உடையவர்கள் பரிகாரம் செய்து வழிபட்டனர். யந்திர வடிவில் சனீஸ்வரன் பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தரகளுக்கு  காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !