உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சக்கணக்கில் வரும் வருவாய்.. அடிப்படை வசதிகள் இல்லை; குச்சனூர் கோயிலில் பக்தர்கள் அவதி

லட்சக்கணக்கில் வரும் வருவாய்.. அடிப்படை வசதிகள் இல்லை; குச்சனூர் கோயிலில் பக்தர்கள் அவதி

சின்னமனூர்; சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் உள்ள குச்சனூரில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சியும், ஹிந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் உள்ளது. சனீஸ்வர பகவான் இங்கு சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். தமிழ்நாட்டில் சனீஸ்வர பகவானுக்கென தனி கோயில் வேறு எங்கும் இல்லை. எனவே சனீஸ்வர பகவானை தரிசிக்க தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினமும் வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும், நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர் உள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயிலிற்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக குடிநீர், கழிப்பறை, தங்கும் வசதி, சாப்பிட ஓட்டல் என எதுவும் இல்லை. மிக முக்கியமாக கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெண் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். அதே போன்று பஸ் ஸ்டாண்ட் ஒன்றும் ஏற்படுத்த வேண்டும், வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியில்லாமல் ரோடுகளில் நிறுத்தி வருகின்றனர். எனவே ஹிந்து சமய அறநிலையத் துறையும், பேரூராட்சி நிர்வாகமும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !