உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கவர்னர் தமிழிசை; மழை பாதிப்பு நீங்கி மக்கள் நலம் பெற வழிபாடு

திருநள்ளாறு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கவர்னர் தமிழிசை; மழை பாதிப்பு நீங்கி மக்கள் நலம் பெற வழிபாடு

உலகப் பிரசித்தி பெற்ற காரைக்கால் திருநள்ளாறு தர்பானேஸ்வரர் கோவில் சனீஸ்வர பகவான் சன்னதியில் நடந்த  சனி பெயர்ச்சி விழாவில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இது குறித்து கவர்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்; தற்போது மழை வெள்ளத்தில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டி, திருநள்ளாறு சனீஸ்வரன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரார்த்தனை செய்தேன் என்று கூறினார். முன்னதாக சிதம்பரம் கோயில் வந்த கவர்னர் தமிழிசையை கோவில் தீட்சிதர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜரை தரிசனம் செய்தார். தொடர்ந்து தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !