உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் மார்கழி உற்சவ கொடியேற்றம்

நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் மார்கழி உற்சவ கொடியேற்றம்

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் மார்கழி உற்சவத்திற்கான கொடியேற்று விழா நடந்தது.

இக்கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னதி, 49 அடி உயர மாகாளியம்மன், சப்த கன்னியருடன் குருபகவான் சிலைகள் உள்ளன. டிசம்பர் 27ல் ஐயப்ப சுவாமி உற்சவ விழாவும், 28ல் 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு 108 குடங்கள் பாலாபிஷேகம், 18ம் படி விளக்கு பூஜைகள் நடைபெறும். விழாவிற்கான கொடியேற்று விழாவில் ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். மத்திய அரசு வழக்கறிஞர் குமார், கோயில் அறங்காவலர் முத்து வன்னியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் வளாகத்தில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீப ஆராதனை செய்து கொடியேற்றினர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 21 பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் பெருமாள்சாமி, குமார், தேவேந்திரன், மனோஜ்குமார், ராஜபாண்டி, ரமணி, ராமையா உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !