/
கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; கும்பாபிஷேகம் கோலாகலம்
வரசித்தி விநாயகர் கோயிலில் கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :667 days ago
மதுரை; மதுரை, வரசித்தி விநாயகர் கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கருமாரியம்மன் சன்னிதியில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கருமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாக பூஜைகள் மற்றும் வேத மந்திரம் முழங்க அம்மன் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.