உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் புறப்பாடு; பக்தர்கள் பரவசம்

ஸ்ரீரங்கத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் புறப்பாடு; பக்தர்கள் பரவசம்

ஸ்ரீரங்கத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரம்) நம்பெருமாள் புறப்பாடு; பக்தர்கள் பரவசம்

திருச்சி; ஸ்ரீரங்கம் பகல் பத்து திருமொழித்திருநாள் பத்தாம் திருநாளில் நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள்புறப்பாடு நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்தாம்  நாளில், மோகினி அலங்காரம் என்னும் நாச்சியார் திருக்கோலத்தில் நம்பெருமாள் சௌரிக் கொண்டை அணிந்து, சூர்ய சந்திர வில்லை, கலிங்கத்துராய், தலைக்காப்பு, வைர மாட்டல் - தோடு, பங்குனி உத்திர பதக்கம், திருமாங்கல்யம், அடுக்கு பதக்கங்கள், பவழ மாலை, 6 வட முத்து மாலை, நெல்லிக்காய் மாலை, வலது திருக்கையில் கோலக்கிளி, இடது திருக்கையில் வளைகாப்பு, காடகம், தாயத்து தொங்கல், திருச்சுட்டிகள் அணிந்து,வெண்பட்டு உடுத்தி, திருவடியில் - தண்டை, சதங்கை அணிந்து, பின் சேவையில் - புஜ கீர்த்தி, அரைச் சலங்கை, ஜடை நாகம், ராக்கொடி, ஏலக்காய் தாண்டா அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !