அயோத்தி ராமர் கோவில் அட்சதை; 2 லட்சம் வீடுகளுக்கு வினியோகம்
ஊட்டி; அயோத்தி ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதையை 2 லட்சம் ஹிந்துக்கள் வீடுகளுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் ஜன., 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியை ஒட்டி அயோத்தியில் இருந்து கொண்டுவரப்பட்ட பூஜிக்கப்பட்ட அட்சதைகளுடன் மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கலக்கப்பட்டு பாக்கெட்டுகளில் தயார் படுத்துவதற்காக ஊட்டி அருகே எச்.பி.எப்., பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் மஞ்சளுடன் பெருக்கப்பட்ட அட்சதைகள் சிறு, சிறு பாக்கெட்டுகளில் போடும் பணி குரு பிரகாஷ் சுவாமி தலைமையில் துவங்கியது. அட்சதை பாக்கெட்டுகள் தயார் படுத்தியின் பின், ஜன., 1ம் தேதி முதல் 15 ம் தேதி வரை ஹிந்துக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்," அயோத்தி ராமர் கோவிலில் ஜன., 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகம் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சியில் பாரத நாட்டில் உள்ள அனைத்து ஹிந்துக்களும் பங்கேற்க வேண்டும். என்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று ராமர் கோவிலின் படத்துடன் அழைப்பிதழை கொடுப்பதுடன், பூஜிக்கப்பட்ட அட்சதைகளுடன் மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கலக்கப்பட்ட பாக்கெட்டுகள், 2 லட்சம் ஹிந்துக்கள் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நாளில் கிராமங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்வதுடன், வீடுகளில், 5 விளக்குகள் ஏற்ற வேண்டும்." என்றார்.