இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் புதுச்சேரி கோயில்களில் உழவாரப்பணி
சென்னை; அம்பத்தூர் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் நாளை 23-12-23 சனிக்கிழமை 259வது உழவாரப்பணி (தூய்மை செய்யும் பணி) தமிழகம் ஆந்திரா தொடர்ந்து முதன் முதலாக புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ளது.
முதல் நிகழ்வாக காலை 9 மணிக்கு திருக்கோயில்களின் தூய்மை நலன் பாதுகாப்பு குறித்து பக்தகோடிகளிடையே பன்னிரு திருமுறையில் உருவாக்க பட்ட 6 அடி திருமுறை நாதர் சுமந்து திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பிரச்சுரங்கள் வழங்கி அடியார்கள் புடைசூழ திருவீதியுலா நடைபெறும். இத்திருவீதியுலாவை வில்லியனூர் சட்ட மன்ற உறுப்பினர் இரா.சிவா துவக்கி வைக்கிறார். உடன் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக செயல் அலுவலர் திருக்காமேஸ்வரர் சிறப்பிக்க உள்ளார். இப்பணியை தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி துணிப்பைகள் வழங்குதல், தொடர்ந்து உழவாரப்பணி காலை 10 முதல் திருக்கோயில் சுற்றுச்சுவர் வெளிப்புறம், மாடவீதிகள், திருக்குளம், நந்தவனம், அன்னதான கூடம் திருத்தேர் வளாகம், கோசாலை உள் மற்றும் வெளி பிரகாரங்கள் தூய்மை செய்தல், மதியம் 2 மணிக்கு உலக நலன் வேண்டி பன்னிரு திருமுறை பாடி ஐந்தெழுத்து ஓதி அடியார்கள் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறவுள்ளது.
மறுநாள் 24-12-23 ஞாயிற்றுக்கிழமை திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி & விழிப்புணர்வு நடைபெறவுள்ளது. இப்பணியை புதுச்சேரி உள்துறை அமைச்சர் அ.நமச்சிவாயம் துவக்கி வைக்கிறார். திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் சிவா கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். மற்றும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக செயல் அலுவலர் அருணகிரிநாதர் கலந்து கொள்ள உள்ளார்.