உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சி விழா; நளன் குளத்தில் நீராடி தருமபுரம் ஆதீனம் வழிபாடு

சனிப்பெயர்ச்சி விழா; நளன் குளத்தில் நீராடி தருமபுரம் ஆதீனம் வழிபாடு

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் நளன் குளத்தில் நீராடி வழிபாடு செய்தார்.

காரைக்கால் திருநள்ளாறு பிரசித்திபெற்ற ஸ்ரீதர்பாரண்யோஸ்வரர் கோவில் தனி சன்னதியில் ஸ்ரீசனீஸ்வரபகவான் அருள்பலித்து வருகிறார்.இக்கோவில் சனிப்பெயர்ச்சி நேற்று முன்தினம் மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவுக்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகைப்புரிந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சனிபெயர்ச்சி முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் நளன் குளத்தில் நீராடினர்.பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் மேற்கொண்டு பின்னர் சனிபகவான் கோவிலில் எள் தீபம் ஏற்றி சிறப்பு பூஜையில் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !