/
கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வெள்ளி சிறப்பு வழிபாடு; மதுரபாஷினி அம்மனுக்கு அபிஷேகம்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வெள்ளி சிறப்பு வழிபாடு; மதுரபாஷினி அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :853 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று மார்கழி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மார்கழி வெள்ளியை முன்னிட்டு, இன்று (22ம் தேதி) விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.