உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம்; கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அழகிரிநாதர் அருள் பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்து அருள்பாலித்த அழகிரிநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராப்பத்து உற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் தினமும் இரவு, 7:00 மணிக்கு அழகிரிநாதர், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருவாய்மொழி வேதபாராயணம் சேவித்தல், தீபாராதனை நடக்க உள்ளது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, கமிஷனர் விஜயகுமாரி தலைமையில், 620 போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !