உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (டிச. 23) காலை 5.50 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சிறப்பு பூஜைகள் முடிந்தபின் காலை 5.50 மணிக்கு ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியே எழுந்தருளிய சுவாமியை ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தனர். பின்னர் மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, வடபத்ரசயனர் சன்னதி ராப்பத்து மண்டபத்திற்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் எழுந்தருள்கின்றனர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், அரையர் வியாக்கியானம், சேவா காலம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 4:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டு ஆஸ்தானம் செல்கின்றனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்துள்ளனர். நாளை (டிச.23) முதல் 2014 ஜனவரி 1 வரை 10 நாட்கள் ராப்பத்து உற்சவம் தினமும் இரவு 7:30 மணி முதல் பெரிய பெருமாள் சன்னதியில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !