உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ருத்ராட்ச பந்தல்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ருத்ராட்ச பந்தல்

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஒரு லட்சம் ருத்ராட்சம் விமான மஞ்சம் அமைத்து கைலாயம் வாகனத்தில் வீதி உலா. நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன 7ம் நாள் விழாவிற்காக ஒரு லட்சம் ருத்ராச்சத்தில் உருவான, ருத்ராட்ச விமானம் கோவில் ஒப்படைக்கப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 18ம் தேதி துவங்கியது. இதில் 7ம் நாள் திருவிழாவின்போது சிவானந்தநாயகி சமேத தில்வஆரண்யர் கைலாச பருவதத்தில் பவனி வருவார்கள். இதில் சுவாமி வீதியுலா செல்ல, ஒரு லட்சம் ருத்ராட்சத்தில், செப்பு கம்பிகலளால் ருத்ராட்சி குடையும் ருத்ராட்ச விமானமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொறு ஆண்டும் சாதாரன வகையில் உள்ள விமானத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்று வரும் நிலையில், நடராஜர் கோவில் பாஸ்கர் தீட்சிதர் ஏற்பாட்டில் பேரில், இந்த ஆண்டு ருத்ராட்ச விமானத்தில் சுவாமி வீதியுலா செல்ல இருப்பது சிறப்பாகும். விசேஷ • ருத்ராட்ச பந்தல் மற்றும் ருத்ராட்ச குடை வழங்கும் நிகழ்வு பாஸ்கர் தீட்சிதர் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !