உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 1008 கலசநீர் அபிஷேகம்
ADDED :665 days ago
ராமேஸ்வரம்; உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் 1008 கலச அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்திரபிரதேசம் அயோத்தி சேர்ந்த சாது சயனந்தா தலைமையில் உ.பி., பக்தர்கள் உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதி அருகில் 1008 கலசத்தில் புனித கங்கை நீரை ஊற்றி கோயில் குருக்கள் மூலம் பூஜை செய்தனர். பின் புனித கலச நீரை சுவாமி சன்னதிக்கு எடுத்து சென்று அபிஷேகம் செய்தனர். இதனைதொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.