ஸ்ரீரங்கம் இராப்பத்து 2ம் நாள்; வெளிர் பச்சை பட்டு உடுத்தி நம்பெருமாள் சேவை
ADDED :665 days ago
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் இராப்பத்து இரண்டாம் திருநாளில் ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில் திருநாரணன் முடி, முத்தரசன் கொரடு கீரிடம் அணிந்து, சிகப்பு கல் தாமரை பதக்கம், அடுக்கு மகர கண்டிகை, சந்திர வில்லை, தங்கப்பூண் சிறிய பவழ மாலை, 6 வட முத்து மாலை அணிந்து வெளிர் பச்சை பட்டு உடுத்தி நம்பெருமாள் சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.