உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கோவிலில் தேர், ஆருத்ரா தரிசன விழா; போக்குவரத்து மாற்றம்

சிதம்பரம் கோவிலில் தேர், ஆருத்ரா தரிசன விழா; போக்குவரத்து மாற்றம்

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன உற்சவ விழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்தவ விழாவில், 26-ம் தேதி தேர் திருவிழாவும், 27-ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. அதனையொட்டி ஏ.எஸ்.பி., ரகுபதி உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்திபன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: தேரோட்டம் மற்றும் தரிசன விழா நடைபெறும் நாட்களாக 26. 27 தேதிகளில் தேரோடும் வீதிகளில் பேருந்து, லாரி மற்றும் கார் கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. நான்கு வீதிகளில் எவ்வித வாகனங்களையும் நிறுத்தக்கூடாது. மேலும் மயிலாடுதுறை, சீர்காழி மார்க்கமாக சிதம்பரம் வரும் பேருந்துகள் பொய்யாப்பிள்ளைச்சாவடி மந்தகரை வழியாக மன்னார்குடித்தெரு, மாலைக்கட்டிதெரு, போல்நாராயணன் தெரு, விஜிபி தெரு வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலூர் மற்றும் புவனகிரி மார்க்கமாக வரும் பேருந்துகள் வடக்குமெயின் ரோடு பைசல் மகால் வழியாக வடக்கு வீதி, 16-ல் கால் மண்டபதெரு, தேரடி பிள்ளையார் கோயில் தெரு வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அதே போல் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் எஸ்.பி.கோயில்தெரு, பச்சையப்பன் பள்ளிதெரு, மந்தகரை வழியாக புறவழிச்சாலை வழியாக வெளியே செல்ல வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !