பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :728 days ago
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரம், ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி அதிகாலையில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு யாகம் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஆருத்ரா தரிசன பூஜையில் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்துஅய்யர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.