/
கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் பிரணய கலக உற்சவம்; கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை சமாதான படுத்திய ஏழுமலையான்!
திருப்பதியில் பிரணய கலக உற்சவம்; கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை சமாதான படுத்திய ஏழுமலையான்!
ADDED :664 days ago
திருப்பதி; திருப்பதியில் பிரணய கலஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் கோபத்தில் 3 முறை பூ பந்துகளை மலையப்ப சுவாமி மீது வீசினர். அதில் இருந்து தப்பித்து மலையப்ப சுவாமி பின்னால் சென்றார். இந்த சம்பிரதாய உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. பின்னர் தாயார்களை சமாதானப்படுத்திய மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கோயிலுக்கு வந்தடைந்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.