சக்கம்பட்டி ஐயப்ப சுவாமி கோயில் மார்கழி உற்சவ விழா
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி, சர்வ சக்தி மாகாளியம்மன் கோயில் மார்கழி உற்சவ விழா நடந்தது. இரு நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் ஐயப்ப சுவாமிக்கு 1008 பூஜையுடன் இரவில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய 2ம் நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சப்த கன்னியருடன் உள்ள குரு பகவான் சிலைக்கு குபேர ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளியம்மன் சிலைக்கு 108 குடங்களில் பாலாபிஷேகம், பூச்சொரிதல் விழா, அன்னதானம் நடந்தது. இரவில் ஐயப்ப சுவாமியின் 18ம் படியில் நடந்த விளக்கு பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்துவன்னியன் தலைமையில் பக்தர்கள் குழு செய்திருந்தனர்.