திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 38.95 லட்சம் உண்டியல் வருமானம்
ADDED :791 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் சுரேஷ், அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வர் இளவரசி, தக்கார் பிரதிநிதி பானுமதி, சுப்பிரமணிய சுவாமி கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 38,95,647. தங்கம் 207 கிராம், வெள்ளி 1,148 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலய வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.