உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தரிசனம் ; தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர்

அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு தரிசனம் ; தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர்

திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர்.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த மார்கழி, 1 முதல்,  அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி, சம்பந்த  விநாயகர் மற்றும் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதலே  ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து,  நவக்கிரக சன்னதிகளில் நெய் தீபமேற்றி வழிபட்டு,  கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், பூத நாராயணன் கோவில்,  ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், இஞ்சிமேடு சிவன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, திருவண்ணாமலை ஆற்காடு லுாதரன் சர்ச் மற்றும் உலக மாதா தேவாலயங்களில், நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !