ஆங்கில புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு; அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :663 days ago
திட்டக்குடி; திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி கோவில்களில், ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத ரங்கநாதபெருமாள், திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுஹாசனபெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முக்களத்தியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.