உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

போடி; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

* போடி கீழச்சொக்கநாதர், மேலச் சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

* போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகன், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

* போடி ஐயப்பன் கோயில், போடி புதூர் சங்கடகர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பால விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !