காரமடை ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
ADDED :654 days ago
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த, 13ம் தேதி திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவம் துவங்கியது. தினமும் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி வைபவத்தின் நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.