உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் வளரொளிநாதர் கோயிலில் பைரவர் மகாயாகம் துவக்கம்

திருப்புத்தூர் வளரொளிநாதர் கோயிலில் பைரவர் மகாயாகம் துவக்கம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே ந.வயிரவன்பட்டியில் வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் நேற்று 64 பைரவர்களுக்கான பைரவ மகாயாகம் துவங்கியது.

ஏழக பெருந்திருவான வயிரவன் கோவில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தைச் சேர்ந்த இக்கோயில் நகரத்தாரின் நவ கோயில்களில் ஒன்று. இங்கு  எழுந்தருளியுள்ள மார்த்தாண்ட வயிரவசுவாமிக்கு ஜன.4 ல் பைரவர் மகாயகம் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது.  மாலை 5:30 மணிக்கு  நகரத்தார்களுக்கு சங்கல்பம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 7:00 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் யாகசாலை சுவாமிக்கு தீபாராதனை காட்டி முதற்காலயாக பூஜையை துவக்கி வைத்தார். கோயில் குருக்கள் சிவகுமார் சிவாச்சார்யார் தலைமையில் 64 குண்டங்கள் மற்றும் பிரதான குண்டத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 9:00 மணிக்கு 2ம் காலயாக பூஜையும், மாலை 5:00 மணிக்கு 3ம் காலயாக பூஜையும் துவங்கும். தொடர்ந்து அஷ்ட பைரவ வடுக பூஜை, கன்யா பூஜையும் நடைபெற்று  பூர்ணாகுதி நடைபெறும். நாளை  காலை 9:00 மணிக்கு வெண்பட்டு  ஹோமம், வஸோதாரா ஹோமம்  நடந்து பூர்ணாகுதிக்கு பின் மூலஸ்தான பைரவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பைரவருக்கு தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !