உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் சுவாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (ஜன. 3) காலை 10:30 மணிக்கு நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அழகாபுரியில் இருந்து ஆண்டாள் கோயில் வரையிலும், ஆண்டாள் கோயில் வளாகத்திற்குள்ளும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !