ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த திருவிளையாடல் ; மேலுாரில் பக்தர்கள் தரிசனம்
ADDED :749 days ago
மேலுார்; திருவிளையாடல் புராணத்தில, உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த நாளை அஷ்டமி சப்பர விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு சிவன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன், வள்ளி, தெய்வானை மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ரிஷப வாகனத்திலும், காமாட்சி அம்மன் சிறிய ரிஷபவாகனத்திலும், சன்டிகேஷ்வரர் கேடகத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதற்கு முன்பாக நிர்வாக அதிகாரி வாணிமகேஷ்வரி ஏற்பாட்டின் பேரில் சிவன் கோயிலில் சிவாச்சரியார் தட்சினாமூர்த்தி அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.