முத்தங்கி அலங்காரத்தில் காலபைரவர் காட்சி ; காரைக்காலில் பக்தர்கள் பரவசம்
காரைக்கால்; காரைக்கால் நித்திஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முத்தங்கி அலங்காரத்தில் காலபைரவர் காட்சி அளித்தார்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நித்திஸ்வரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நித்தியக்கல்யாணி சமேத நித்திஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று அனைத்து சிவாலயங்களிலுள்ள ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீநித்திஸ்வரர் கோயிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் மஞ்சள், பால், தயிர், தேன், பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்களுடன் சிவாச்சாரியார்கள் கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து புனித நீராலும் மகாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் முத்தங்கி அலங்காரம் மற்றும் ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.