கொடைக்கானலில் தேய்பிறை அஷ்டமி பூஜை; கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
                              ADDED :665 days ago 
                            
                          
                           கொடைக்கானல்; கொடைக்கானல் டிப்போ காளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. இங்குள்ள கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல் நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் உள்ள காலபைரவருக்கும் தேய்பிறை அஷ்டமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.