உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமி பூப்பிரதட்சணம் : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் படியளந்தனர்

அஷ்டமி பூப்பிரதட்சணம் : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் படியளந்தனர்

ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு இன்று ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு படியளந்தனர்.

இன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை 7 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் திட்டகுடி, வர்த்தகன் தெரு, சீதா தீர்த்தம் வரை சாலையில் உலா வந்து பக்தர்களுக்கு படியளந்து அருளாசி வழங்கினார். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்களுக்கு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மதியம் 12 மணிக்கு சுவாமி, அம்மன் கோவிலுக்கு திரும்பினர். இதனால் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !